ஆண் தாய் !






















தாய் என்ற சொல்லுக்கு
ஆணும் சரிபாதி சொந்தன்காரன்...!

மகனே !...

நான் உன்னை சுமக்கவில்லை,
நான் உன்னை சுவசிகிரேன்...!

மகனே !..

நான் உன்னை  பெற்றெடுக்கவில்லை
உன் தாயின் வலி புரியவில்லை என்றர்தமில்லை..!

மகனே !..
உன் உடல் நாம் சரியில்லை என்றதும்
நான் மனநலம் சரி இல்லவனாகி விட்டேன்..

மகனே !..
யார் செய்த பிழை என்று நான் அறியேன்,
பிழை அவனுடையதாக இருப்பினும்,
என் தாய்மை அதை திருத்தி எழுதும் ..!

மகனே !..

நான் பணத்திற்காக மற்றவரிடத்து
கையேந்துவதை பார்த்து வருத்தம் கொல்லாதே..
இதற்க்கு காரணம் கையில் பக்காகிதம்
இல்லையென்றே பொருள்...!

பொருள் எதுவாக இருந்தாலும்,
பொருள் கொடுத்து உதவியர்களை மறவாதே..!

மகனே !..
என் உதிரத்தில் உயிர்பெற்று,
தாய் உதிரத்தில் பசியாறி
வாழ்ந்த உன்னை..

என் உரியை கொடுத்தேனும்,
உன்னை மீட்டெடுப்பேன்..

சான்று காட்ட இது வழக்கு அல்ல
வாழ்க்கை... இருந்தும்

உனக்காக நான் கொடுக்கும்
என் செருநீரகமே அதற்க்கு சான்று !..

இந்த தந்தையின் அன்பு
பலவகையான அனுபவத்தை எனக்களித்தது...

அறுவை சிகிச்சைக்கு செல்லும் இந்த உறவுகள்
ஆரோக்கியமாக திரும்ப

எல்லாம்வல்ல அன்பு துணை நிற்கும்..
அன்புடன் அன்புடன் குழுவினர்...